உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்கால், தார் சாலை சுதானா நகர் மன்றம் கோரிக்கை

கழிவுநீர் வாய்க்கால், தார் சாலை சுதானா நகர் மன்றம் கோரிக்கை

புதுச்சேரி : சுதானா நகர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால், தார் சாலை அமைத்து தர வேண்டுமென சுதானா நகர் நண்பர்கள் நற்பணி மன்றம் கோரிக்கை வைத்துள்ளது. சுதானா நகர் நண்பர்கள் நற்பணி மன்ற செயற்குழு கூட்டம் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. மன்ற கவுரவத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கழிவு நீர் வாய்க்கால், தார் சாலைகள் சுதானா நகர் விரிவு 1, 2, 3, ஆகிய பகுதிகளில் அமைத்து தர வேண்டும். சுதானா நகர் கலைமகள் வீதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.மாணவர்களுக்கு நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற ஆலோசகர் ஆசிரியர் அங்கமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை