உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  -----அப்போலோ சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை

 -----அப்போலோ சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் நாளை (11ம் தேதி) புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் அனந்தநாராயணன் நாளை (11ம் தேதி) வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் தலைவலி, மூளைத் தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், நடப்பதில் தடுமாற்றம், பெருமூளை வாதம், பேச்சு தாமதம், மூளை காய்ச்சல், அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் ஏ.எஸ்.டி., கவனக்குறைவு மிகை, இயக்கம் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 8248753248, என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !