மேலும் செய்திகள்
ரூ.5.42 கோடி சொத்து சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
2 hour(s) ago | 10
ரிஷிவந்தியத்தில் பிரேமலதா? தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
3 hour(s) ago | 9
திருக்கனூர் : திருக்கனூரில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கனூரில் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப்-இன்ஸ்பெக்டர் ஆடலரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கூனிச்சம்பட்டு வழியாக, விழுப்புரம் நோக்கி வந்த, டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 1லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 306 பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம், ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hour(s) ago | 10
3 hour(s) ago | 9