உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியாங்குப்பம் : கடலில் மீன் பிடிக்கும் போது, பாதுகாப்பு முறைகள் பற்றி நல்லவாடு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்திய கடலோர காவல்படை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து, நல்லவாடு தெற்கு பகுதி மீனவர் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன் வரவேற்றார்.இந்திய கடலோர காவல்படை அதிகாரி செல்வநாதன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது, பாதுகாப்பு முறைகள் குறித்து, படகில் பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்வது பற்றியும், அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றி விளக்கம் அளித்தார்.இந்த நிகழ்ச்சியில், கடலோர காவல்படை அதிகாரி, கார்த்திகேயன், நல்லவாடு மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி