உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைக்கு தொல்லை  தொழிலாளிக்கு 10 ஆண்டு

குழந்தைக்கு தொல்லை  தொழிலாளிக்கு 10 ஆண்டு

புதுச்சேரி:புதுச்சேரி, வில்லியனுாரைச் சேர்ந்தவர் அய்யனார், 52. கூலி தொழிலாளி. இவர், 2018 நவ., 12ல், வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வில்லியனுார் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கில், புதுச்சேரி போக்சோ சிறப்பு விரைவு கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.நீதிபதி சுமதி, அய்யனாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு, 4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அய்யனார் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை