மேலும் செய்திகள்
விநாயகருக்கு தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி
07-Sep-2024
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் உள்ள இனிப்பகம் ஒன்றில் படையலுக்கு வைக்கப்பட்டிருந்த 111 கிலோ எடையுள்ள, பிரம்மாண்ட லட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் சுவிட்ஸ் கடையில் 21வது ஆண்டாக 111 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு விநாயகருக்கு படையல் வைக்கப்பட்டது.மூன்று தினங்கள் படையலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த மெகா லட்டு, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனியார் இனிப்பகம் ஒன்றில் 111 கிலோ பிரமாண்ட லட்டு விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
07-Sep-2024