மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை
10-Aug-2024
புதுச்சேரி: ஏனாமில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.தமிழகம் புதுச்சேரியில் ஆடி மாதம் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும். அதுபோல் ஆந்திராவில் தெலுங்கு நாட்காட்டிபடி, சிரவண மாதம் அம்மன் கோவில்களில் வழிபாடு நடக்கும். ஆக., 3 துவங்கி செப்., 3 வரை சிரவண மாதம். இந்த நாட்களில் ஆந்திராவில் உள்ள அம்மன் கோவிலில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடக்கும். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில், புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின், 16 லட்சத்தில் 500, 200, 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மாலை உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த வனக்கால நரேந்திர என்ற பக்தர் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
10-Aug-2024