மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
08-Jul-2026
புதுச்சேரி: கொட்டுப்பாளையத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, கொட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு சிலர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக தன்வந்தரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மூலகுளம், பிச்சைவீரன்பேட், வாய்க்கால் வீதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் மணிகண்டன், 20; கவுண்டன்பாளையம், மாரியம்மன் கோவில் தெரு பார்த்திபன் மகன் அபிேஷக், 23, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
08-Jul-2026