காசு வைத்து சூதாட்டம் ஏனாமில் 24 பேர் கைது
புதுச்சேரி: ஏனாமில் காசு வைத்து சூதாடிய 24 பேரை போலீசார் கைது செய்தனர்.ஏனாம் அடுத்த கோபால் நகர் அருகே தனியார் வணிக வளாகத்தில், காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஏனாம் சப்இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாடிய சாய் கிருஷ்ணா, வெங்கட சிவா, விஜய கோபால் ராஜ் உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள், 16 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.