உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கைப்பந்து விளையாட்டு போட்டி செங்கல்வராயர் அணிக்கு 2ம் இடம்

கைப்பந்து விளையாட்டு போட்டி செங்கல்வராயர் அணிக்கு 2ம் இடம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தை அடுத்த பெரிய இருசாம்பாளையம் பகுதியில் நடந்த கைப்பந்து முதலாம் ஆண்டு போட்டியில், செங்கல்வராயர் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. அரியாங்குப்பம் அடுத்த பெரிய இருசாம்பாளைத்தில் கைப்பந்து போட்டி, கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டியில், கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, புதுச்சேரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில், முதல் பரிசை மரக்காணம் அணி தட்டிச்சென்றது. இரண்டாவது இடத்தை, பி.டி.லீ., செங்கல்வராயர் அணி வெற்றி பெற்றது. மூன்றாவதாக, அண்ணா அணியினர் பரிசு பெற்றனர். அதில், பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் பி.ஆர். பிரதர்ஸ் அணி வெற்றி பெற்றனர். பி.டி.லீ ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி, காஸ்மோஸ், ஆதவா ஸ்டீல், புன்னகை பெரியார் எழுது பொருள் நிறுவனம், எஸ். எஸ். டிரேடர்ஸ், அசோக்குமார், விக்னேஷ், சித்ரா ஆகியோர் பரிசுகளுக்கு நன்கொடை வழங்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்த விளையாட்டு போட்டியை பீ.டி.லீ., செங்கல்வராயர் விளையாட்டு கழகம் சார்பில், ஏற்பாடு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ