உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டரில் வந்து ஆடுகள் திருட்டு திட்டக்குடி அருகே 3 பேர் கைது

ஸ்கூட்டரில் வந்து ஆடுகள் திருட்டு திட்டக்குடி அருகே 3 பேர் கைது

திட்டக்குடி, ஜூன் 25– திட்டக்குடி அருகே நள்ளிரவில் ஸ்கூட்டரில் வந்து, ஆடுகள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது, நள்ளிரவு 2:00 மணியளவில் பெருமுளை – திட்டக்குடி சாலையில் சந்தேகத்தின்பேரில் ஸ்கூட்டரில், 3 வாலிபர்கள் 2 ஆடுகளை துாக்கிக்கொண்டு சென்றது தெரிந்தது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் மூவரும் திட்டக்குடி அடுத்த நெடுங்குளத்தைச் சேர்ந்த ராதா மகன் செல்லதுரை, 24; பாண்டியன் மகன் அஜித்குமார், 20; அம்பேத்குமார் மகன் ஆகாஷ், 19; என்பதும், இவர்கள் செவ்வேரி ஆதிமூலம் என்பவரின் வீட்டின் முன்பு கட்டியிருந்த 2 ஆடுகளை திருடிச் சென்றதும் தெரிந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரை, அஜித்குமார், ஆகாஷ் மூவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். ஆடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ