உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய வருவாய் வழி தேர்வு 3,460 பேர் எழுதினர்

தேசிய வருவாய் வழி தேர்வு 3,460 பேர் எழுதினர்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய வருவாய் வழி தேர்வினை 95.08 சதவீத பேர் எழுதினர்.மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு புதுச்சேரியில் 16 மையங்களில் பள்ளி கல்வித் துறை சார்பில் நேற்று நடந்தது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆர்வமாக எழுதினர். இத்தேர்வினை விண்ணப்பித்து இருந்த 3,639 பேரில், 3,460 பேர் அதாவது 95.08 சதவீத பேர் எழுதினர்.புதுச்சேரியில் விண்ணப்பித்த 2,684 பேரில், 2556 பேர் தேர்வினை எழுதினர். காரைக்கால் பிராந்தியத்தில் விண்ணப்பித்த 745 பேரில், 709 பேர் எழுதினர். மாகியில் விண்ணப்பித்த 87 பேரில், 79 பேரும், ஏனாமில் விண்ணப்பித்த 123 பேரில் 116 பேரும் எழுதினர்.தேர்வு மையங்களை பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த தேர்விற்கான கேள்வித்தாள் மற்றும் விடைகுறிப்புகள் www.schooledn.py.gov.inஎன்ற இணையதளத்தில் நாளை 3ம் தேதி வெளியிடப்படும். விடைகளில் ஆட்சேபனை இருந்தால் 5ம் தேதிக்குள் dsepdy.edu.inஎன்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை