5 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
அரியாங்குப்பம்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 ரவுடிகளை ஊருக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என, போலீசார், சப் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்த ஹேமநாதன், 22; ஆர்.கே., நகர் விஸ்வா, 22; மாஞ்சாலை கிருஷ்ணா, 25; ஓடைவெளி அஸ்வின், 30; உதயா, 29, இவர்கள் மீது கொலை முயற்சி, அடிதடி, ரவுடிசம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் ஊருக்குக்குள் வந்தால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சப் கலெக்டர் இஷிதா ரதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.