பொது இடத்தில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் பன்றிகள், கால்நடைகளை திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில், பொதுமக்களின் இருப்பிடம் மற்றும் உடமைகள், போக்குவரத்திற்கு இடையூறு, காய்கறி பொருட்கள், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் கால்நடைகள் மற்றும் பன்றிகள் திரிய விடுவதாக கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. ஆகையால் பன்றிகள், கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்கள் பொது இடத்தில் அதனை சுற்றி திரியவிடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே கால்நடைகள், பன்றிகளை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில், கால்நடைகள் மற்றும் பன்றிகள் கைப்பற்றப்பட்டு, உரிமையாளர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.