மேலும் செய்திகள்
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
28 minutes ago
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
30 minutes ago
கடலுார் : கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து மா.கம்யூ., சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:பா.ஜ., ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதனால் இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் போய்விடும். எந்த நம்பிக்கையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர்ஹேமந்த் சோரன் ஆகியோர் ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டதாக பா.ஜ., கூறுகிறது. பா.ஜ., முதல்வர்கள், அமைச்சர்கள் யாரும் ஊழல் செய்யவில்லையா. தேர்தல் பத்திரத்தில் பா.ஜ., முறைகேடு செய்துள்ளது. மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்.இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றி விடுவார்கள். இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ., கேட்டுகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. மதசார்பின்மை பாதுகாப்பு, மாநில சுயாட்சி, சமூக நீதி போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி உள்ளோம். வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு அ.தி.மு.க., ஆதரவு தந்தது.பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை இரண்டாக பிரித்து இண்டியா கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கபட நாடகம் ஆடி தற்காலிகமாக கூட்டணியை விட்டு பிரிந்துள்ளார். காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
28 minutes ago
30 minutes ago