உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை மக்கள் மீது அரசு திணிக்கிறது அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் காட்டம் 

மின் கட்டண உயர்வை மக்கள் மீது அரசு திணிக்கிறது அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் காட்டம் 

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை முழுமையாக அரசு ரத்து செய்யவேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக முதல்வர் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க அரசு பரிசீலிக்கும் என அறிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின் சாரம் இலவசம் என்ற அறிவித்து அதற்கான மானியத்தை அரசே செலுத்துகிறது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்து அதற்கான மானியத் தொகையை அரசே செலுத்த வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக அரசு ரத்து செய்யவேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் 10 சதவீத ஒழுங்கு முறை கூடுதல் கட்டணம், 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாய் வீடுகளுக்கு நிரந்தர கட்டணம், கடைகளாக இருந்தால் 1 கிலோ வாட்டுக்கு 200 ரூபாய் நிரந்தர கட்டணம், கால தாமதக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் பெறப்படுகிறது. பா.ஜ.,வை தவிர்த்து ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மக்களும் மின் துறை ஊழியர்களுக்கும் ஆதரவாக உள்ளனர். மின் துறை தனியார் மயமாக்குவதற்கு அரசு திட்டமிட்டு அடாவடித்தனமான கட்டண உயர்வுகளை மக்கள் மீது திணிக்கிறது. அரசின் இச்செயலை அ.தி.மு.க.,மக்களின் துணையோடு முறியடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ