ஏ.எப்.டி., மில் மாஜி ஊழியர் தற்கொலை
பாகூர்: ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., மில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம், 73; ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., மில் ஊழியர். இவருக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடது தொடையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைக்கப்பட்ட நிலையில், வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று காலை, வேலாயுதம் துாக்கிட்டு கொண்ட தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.