மேலும் செய்திகள்
எம்.ஐ.டி., கல்லுாரியில் சாப்ட்வேர் பயிலரங்கம்
19-Feb-2025
புதுச்சேரி : மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், வாழும் கலை அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான 'ஆனந்த சிறுவர் திட்ட மூன்று நாள் பயிற்சி' பயிலரங்கம் நடந்தது.ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். தலைமையாசிரியர் அமர்தேவ், ஆனந்த சிறுவர் திட்ட பயிற்சி பயிலரங்கை துவக்கி வைத்தார்.வாழும் கலை அமைப்பின் பயிற்றுநர் சுமதி சீனிவாசன்மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றனர்.ஆசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏகதேவி, முருகன், சுஜித் ஜெயன் அலெக்ஸ், மஞ்சு, ரவீனா, இந்திரா, பானுபிரியா, மதிவதனி, காயத்ரி, அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
19-Feb-2025