அங்காளம்மன் கோவில் உற்சவம் 26ல் துவக்கம்
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவம், நாளை மறுநாள் (26ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மறுநாள் முதல், மார்ச் 4ம் தேதி வரை, தினசரி காலை சுவாமிக்கு ஆராதனை, இரவு சாமி வீதியுலா, நாடகங்கள் நடக்கிறது.தொடர்ந்து 5ம் தேதி இரவு அம்மன், சிங்க வாகனத்தில் வீதியுலாவும், நள்ளிரவு 12:00 மணிக்கு ரணகளிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய விழாவான, 6ம் தேதி மாலை தேரோட்டம், இரவு மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது. 7ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.