உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அண்ணாமலை உருவப்படம் எரிப்பு அ.தி.மு.க., போராட்டத்தால் பரபரப்பு

அண்ணாமலை உருவப்படம் எரிப்பு அ.தி.மு.க., போராட்டத்தால் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் தமிழக பா.ஜ., தலைவரை கண்டித்து அவரது உருவ படத்தை தீவைத்து எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை பற்றி தரக்குறைவாக பேசியதாக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, உப்பளம் பகுதியில், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில், அ.தி.மு.க.,வினர் பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை தீ வைத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை பற்றி அவதுாறாக பேச, பா.ஜ.,தலைவர் அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர் பேச்சு, தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. மறைந்த ஒப்பற்ற தலைவர்கள், தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு எதையாவது பேசி கலவரத்தை துாண்டும் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர கழக செயலாளர் சித்தானந்தம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ