உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்பான எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு சென்டாக் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. மேலும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த தயாராகி வருகிறது.இந்நிலையில், எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் சென்டாக் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் சென்டாக் வெப்சைட்டில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாளாகும்.மேலும், விபரங்களை www.centacpuducherry.in. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை