உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா

அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: இளைஞர் அமைதி மையம் சார்பில், புதுச்சேரி அரசின் முதல் தமிழ்மாமணி விருது பெற்ற மூத்த தமிழறிஞர் அரிமதி தென்னகனாரின்,91ம் ஆண்டு பிறந்த நாள்விழா ஆனந்தரங்கர் நகரில் நடந்தது.நிறுவனர்அரிமதி இளம்பரிதி தலைமை தாங்கினார். ஓய்வுப் பெற்ற கண்காணிப்பாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். உழவர்கரைதாசில்தார் செந்தில்குமார், அரிமதி தென்னகனார் படத்திற்கு மலர் துாவி மரியாதைசெலுத்தினார். தொடர்ந்து நடந்த கவியரங்கில் கவிஞர்கள் அரிமதி தென்னகனார் குறித்து பலர் கவிதை வாசித்தனர். பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பத்மநாதன்,நந்தினி, கனிமொழி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி