மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் வரவேற்றார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் கலந்து கொண்டு கலை மற்றும் அறிவியல் கண்காட்சி துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு புதுச்சேரி மாநில தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.நிர்வாக இயக்குனர் மோகன் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள், அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
16-Aug-2024