உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் மீது தாக்குதல்

வாலிபர் மீது தாக்குதல்

புதுச்சேரி : புதுச்சேரி, பொறையூர் சண்முகா கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் ராகுல்நாதன், 29; எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். கடந்த 9ம் தேதி அய்யங்குட்டிப்பாளையத்தில் தனது நண்பர்கள் அஜித், பிரவின் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.அதேப்பகுதியை சேர்ந்த கோபிநாத், அவரது தம்பி சுமன், நண்பர்கள் குணா, சுந்தர் ஆகியோர் ராகுல்நாதனுடன் பேசி கொண்டிருந்த பிரவினை பார்த்து, 'நீ ஏன் பைக்கை வேகமாக ஓட்டி செல்கிறாய் என, கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.ராகுல்நாதன் கண்டித்ததால், கோபமடைந்த 4 பேரும் இணைந்து, ராகுல்நாதனை திட்டி, உருட்டு கட்டையால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.ராகுல்நாதன் அளித்த புகாரின் பேரில், கோபிநாத் உட்பட 4 பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ