உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள ஹைமாஸ் விளக்கு காட்சி பொருளாக இருக்கும் அவலம்

அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள ஹைமாஸ் விளக்கு காட்சி பொருளாக இருக்கும் அவலம்

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் சாலையில் ஹைமாஸ் விளக்கு எரியாமல், காட்சி பொருளாகவே இருப்பதால், வாகன விபத்தை தடுக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு உள்ளது. அப்பகுதியில் உள்ள அப்பாட்மெண்டில் குடியிருப்பவர்கள் இரவு நேரங்களில் அந்த சாலையை கடந்து செல்லும் போது, வாகன விபத்து நடப்பதால், அங்கு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே எரிந்தது. அதன் பின்னர், ஹைமாஸ் விளக்கு எரியாமல் வெறும் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் தொடர்ந்து வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் தவளக்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் அதிகாரியிடம் முறையிட்டனர். எங்களுக்கும் ஹைமாஸ் விளக்கிற்கும் சம்மந்தமில்லை எனவும், கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறையினர் தான் அதனை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.மணவெளி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருவதால், அப்பகுதி எம்.எல்.ஏ.,தான் நடவடிக்கை எடுத்து எரியாமல் இருக்கும் ஹைமாஸ் விளக்கை எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை