உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருபுவனை போலீஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ பேசுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும், படிக்கும் மாணவர்களிடையே எவ்வித வேறுபாடுகள் இல்லாமல் பழக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை