மேலும் செய்திகள்
'தெரிந்தே செய்யும் தவறு போதை பழக்கம் தான்'
02-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரசு சுகாதார துாய்மைப் பராமரிப்புக் குழு சார்பில், பெண்கள் நல்வாழ்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கருத்தரங்கு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மாமுனிவர் முதுகலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சசி காந்தாஸ் தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பத்மினி பெண்கள் நலவாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு விருந்தினரான பங்கேற்ற டாக்டர் பத்மினி உணவுப் பழக்கங்கள், துாக்க பழக்க வழக்கங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் ரொமானோ அமல்ராஜ், தலைமை செவிலியர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர். குழு உறுப்பினர் ஏஞ்சலின் ஜெனிபர் நன்றி கூறினார்.
02-Jul-2026