உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கியாளர்கள் குழும கருத்தரங்கு

வங்கியாளர்கள் குழும கருத்தரங்கு

புதுச்சேரி: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் மற்றும் பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் புதுச்சேரி மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் சார்பில், மாவட்ட தொழில் மையத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கில், மாவட்ட தொழில் மையத்தின் இயக்குனர் ருத்ர கவுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உதவி இயக்குனர் செல்வின் சாம்ராஜ், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரி ரூபஸ் ஜார்ஜ், மாநில வங்கியாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பிரமணியம், புதுச்சேரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தங்களது துறைகளின் பங்கை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில், 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை