உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரத்த தான ஆர்வலர்கள் கவுரவிப்பு

ரத்த தான ஆர்வலர்கள் கவுரவிப்பு

புதுச்சேரி: உலக ரத்ததான தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, ஜிப்மர் ரத்த வங்கி சார்பில், ரத்ததான தன்னார்வலர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் குல்கர்னி, ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் அபிேஷக், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ரத்த வங்கி பொறுப்பாளர் வடிவேல், லயன்ஸ் கிளப் நிர்வாகி செல்வகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், புதுச்சேரியில் அதிகமுறை (107) ரத்ததானம் வழங்கிய பா.ஜ., வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வத்திற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.  தொடர்ந்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்து வெற்றிச்செல்வம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும், முதல் முறையாக ரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை