உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதி இன்றி இயங்கிய பெட்டி கடைக்கு ‘சீல்’

அனுமதி இன்றி இயங்கிய பெட்டி கடைக்கு ‘சீல்’

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் புகையிலை விற்பனை வழக்கில் சிக்கிய நிலையில், அனுமதியின்றி இயங்கி வந்த பெட்டிக் கடைக்கு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சீல் வைத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.   பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போதை தடுப்பு போலீசார் கடந்த மாதம் 17ம் தேதி, குருவிநத்தம் தென்பெண்ணையாற்று சாலையில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, 150 கிலோ புகையிலைப் பொருட்களையும், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தொடர்ந்து இயங்கி வந்த அந்த பெட்டியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, பஞ்சாயத்தின் உரிய  அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, ஆணையர் சதாசிவம் உத்தரவின் பேரில், கொம்யூன் பஞ்சாயத்து வருவாய் பிரிவு அதிகாரி, நேற்று அந்த பெட்டி கடைக்கு சீல் வைத்து, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகையினை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அனுமதியின்றி கடையை திறக்க கூடாது என, எச்சரித்து, நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை