உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களை அடித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு 

மாணவர்களை அடித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு 

புதுச்சேரி: மாணவர்களை அடித்த இரு ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் கடந்த வாரம் வீட்டிற்கு சென்றபோது, சோர்வாக காணப்பட்டனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அதில் ஆசிரியர் ஒருவர் அவர்களை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ஆசிரியர் அடித்து துண்புறுத்தியது உண்மை என, தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு சார்பில், பெரியகடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.   அதே போல் மற்றொரு தனியார் பள்ளியில் மாணவரை அடித்து துன்புறுத்திய ஆசிரியர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை