உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை தேரோட்டம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை தேரோட்டம்

அரியாங்குப்பம்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை (30ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து, சுவாமி சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நாளை (30ம் தேதி) காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 1ம் தேதி மட்டையடி உற்சவம், காலை 10:00 மணிக்கு நாச்சியார் சம்வாதம், துவாதச ஆராதன திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா மற்றும் புராணம் வாசித்தல் நடக்கிறது. 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகமும், 3ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை