உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்ரா பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

சித்ரா பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நாளை சித்ரா பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியையொட்டி, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நாளை ஆன்மிக நடைபயணம் மேற்கொள்கின்றனர்.அதன்படி நாளை மாலை 5:00 மணிக்கு கோவிலில் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கும் ஆன்மிக நடைபயணம் மாட வீதிகளின் வழியாக ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சீத்தர் பீடம், ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் ஆலயம், சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர்.புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள் இந்த ஆன்மிக நடைபணயத்தில் திரளாக பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை