தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
புதுச்சேரி : சாரம் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி, நேற்று ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புவனேஸ்வரிக்கு, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் சால்வை அணிவித்து பாராட்டினார். இதில், ஒய்வு பெற்ற துணை இயக்குனர் முனுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.