மேலும் செய்திகள்
புகார் பெட்டி: சாலையில் மின் விளக்கு எரியுமா?
30-Apr-2026
கழிநீர் தேங்கி நிற்கிறது லாஸ்பேட்டை மெயின் ரோடு வாய்க்கால் சேதமடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. கணேசன், லாஸ்பேட்டை. கலங்கலான குடிநீர் அரியாங்குப்பம் மேற்கு பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சுமதி, அரியாங்குப்பம். குண்டும் குழியுமான சாலை காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரதிதாசன், காராமணிக்குப்பம். தெரு நாய்கள் தொல்லை புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சாய் அர்ஜூன், புதுச்சேரி. சாலையில் மண் குவிந்துள்ளது கடலுார் சாலை, அரியாங்குப்பம் பகுதி சாலையோரத்தில் மண் குவியலாக கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், அரியாங்குப்பம். சாலையில் மீன் கடைகள் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மணிவண்ணன், உப்பளம். தாறுமாறாக நிறுத்தும் வாகனங்கள் நேரு வீதி ஒரு வழிப்பாதையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மகேஸ்வரி, புதுச்சேரி.
30-Apr-2026