உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்

வரி செலுத்தாதவரின் வீட்டின் முன் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள்

கடலூர்: கடலூர் வரதராஜன் நகரில் வீட்டு வரி பாக்கி வசூலிப்பதற்காக, செந்தில்குமார் என்பவரது வீட்டு முன் கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர்.கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜன் நகரில் செந்தில் குமார் என்பவர் வாடகைக்கு ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என தெரிய வருகிறது. வாடகைக்கு இருக்கும் செந்தில்குமார் குடும்பத்தினரிடம் மாநகராட்சி ஊழியர்கள் வரி பாக்கி கேட்டுள்ளார்கள்.உரிமையாளரே வரியை செலுத்த வேண்டும் நான் எப்படி செலுத்த முடியும் என அவர் கேட்டுள்ளார். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் செந்தில்குமார் வீட்டிற்கு முன்பு பள்ளம் தோண்டி உள்ளனர். இதன் காரணமாக செந்தில்குமார் உள்ளிட்டோர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ