உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையை கடந்த மான்  கார் மோதி பலி 

சாலையை கடந்த மான்  கார் மோதி பலி 

கடலுார்: கடலுார் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளி மான், கார் மோதி இறந்தது.  கடலுார் அடுத்த எஸ்.புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மான், மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதற்கிடையே நேற்று முன்தினம் விழுப்புரம்–நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலையில் கடலுார் அடுத்த எஸ்.புதுார் மேம்பாலம் அருகில் சாலையை கடக்க முயன்ற 2 வயது ஆண் புள்ளி மான் மீது கார் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. தகவலறிந்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், நாகப்பட்டிணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மாருதி ஸ்வீப்ட் கார் மோதி மான் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ