உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலுார் சாலையில் தொடரும் விபத்து சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை

கடலுார் சாலையில் தொடரும் விபத்து சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை

அரியாங்குப்பம் : கடலுார் சாலையில் தொடரும் விபத்தால், விடுபட்ட இடங்களில் சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.புதுச்சேரி-கடலுார் சாலையில் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர்,காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதிகளுக்கும், சென்னைக்கு செல்ல கடலுார்-புதுச்சேரி நெடுஞ்சாலை முக்கிய சாலையாக இருக்கிறது.இந்த சாலையில், தினமும் வாகன நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் இதனால் விபத்து ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதனால், தவளக்குப்பத்தில் இருந்து கன்னியக்கோவில் வரை, சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. சாலையில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்களுக்கு இடையிடையே வழி இருப்பதால், விபத்துகள் நடந்து வருகிறது.இந்நிலையில், நோணாங்குப்பம் ஆற்று பாலம் முதல் இடையார்பாளையம் வரை சாலையில், சென்டர் மீடியன் இல்லாமல் இருப்பதால், தினமும் வாகன விபத்தில் பொதுமக்கள் பலர் சிக்கி வருகின்றனர்.நேற்று காலை 10:00 மணிக்கு, நோணாங்குப்பம் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் வாகன விபத்தில்,சிக்கி தலையில் பலத்த காயமடைந்து, மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.எனவே, நோணாங்குப்பம்-இடையார்பாளையம் இடையே 1 கிலோ மீட்டருக்கு சென்டர் மீடியன் அமைத்து, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை