அரசு பள்ளி மாணவர்களுக்கு துணை கலெக்டர் பாராட்டு
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாப் பள்ளி வளாகம் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரவேற்றார்.விரிவுரையாளர் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை கலெக்டர் தெற்கு சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு கலந்து கொண்டு, போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், இப்பழக்கத்திலிருந்து மாணவர்கள் எவ்வாறு வெளியேறுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், போதைப் பொருட்கள் இல்லாப் பள்ளி வளாகமாக நம் பள்ளி திகழ வேண்டும் என்று உறுதி மொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சந்திரா, சாரங்கபாணி, அசோக், ஜானகிராமன், பத்மாவதி, ஷாலினி, சுந்தர வடிவேலு, கருணாகரன், ஜான், சுரேந்தர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.விரிவுரையாளர் பழனி கூறினார்.