உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கத்தில் மேம்பாட்டு பணி

கிருமாம்பாக்கத்தில் மேம்பாட்டு பணி

பாகூர்: கிருமாம்பாக்கம் பகுதியில் ரூ.98.74 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தனலட்சுமி நகரில் 10 லட்சத்து 470 ரூபாய் செலவில், தார் சாலை , அப்துல் கலாம் நகரில் ரூ.3.76 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால், ரூ.4.43 லட்சம் செலவில் பாலம், ஊரல் குளம் வீதியில் ரூ.6.86 லட்சம் செலவில் சாலை மற்றும் மீன்வளத்துறை சார்பில், நரம்பை கிராமத்தில் ரூ.73.68 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கூடம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை