உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாதுகாப்பு அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி., ஆலோசனை

பாதுகாப்பு அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி., ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்புக்கு செல்லும் அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி., ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரியில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியின் பைலட் வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களை முன் கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும்.வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அந்த மாநில போலீசாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை