உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் தொகுதியில்  தி.மு.க., சிவா தோல்வி  

வில்லியனுார் தொகுதியில்  தி.மு.க., சிவா தோல்வி  

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளரான எதிர்கட்சித் தலைவர் சிவா 1,970 ஓட்டுகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாரிடம் தோல்வியடைந்தார். புதுச்சேரி, வில்லியனுார் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவாவிற்கும், அவருக்கு எதிராக போட்டியிட்ட என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாருக்கும் நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இரண்டாவது சுற்று முடிவில் சிவா முன்னிலை வசித்தார்.  அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார். இறுதி சுற்றான 5வது சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் மொத்தமாக 16,970 ஓட்டுகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் சிவாவைவிட 1,970 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எதிர்கட்சித் தலைவர் சிவா தோல்வியடைந்தார். இத்தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ரமேஷ் 6248 ஓட்டுகள் பெற்றார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை