தி.மு.க., மாநில மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர், சிவா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். மாநில அமைப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் சிவகுமார், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில், விக்னேஷ் கண்ணன், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், சக்திவேல், வேலன், சண்முகம், மயகிரிஷ்ணன், அமுதா குமார், நர்கிஸ் மற்றும் மாநில மாணவரணி நிர்வாகிகள் கண்ணன், அமுதன், ஸ்டீபன் ராஜ், ஸ்ரீஹரி, தமிழ்மகள் ஜான்சி, முத்தரசன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநிலத்தில் சென்டாக் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவித் திட்டங்களின் நிலுவைத் தொகைகள் 2022 ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. இதற்கா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிரெஞ்ச் மொழி புதுச்சேரி பள்ளி கல்லுாரிகளில் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., ஆசிரியர்களுக்கு தொடர் திறன் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.