உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்ட கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் 

சட்ட கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் 

புதுச்சேரி: புதுச்சேரி அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரம், திருச்சி மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு துணை ஆய்வாளர் மலரவண் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். போதை பொருள் விற்பனையை தடுக்க இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களின் உதவி தேவைப்படுகிறது. இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். போதைப்பொருள் வியாபாரிகள், நடுத்தர மாணவர்களை ஆடம்பரமான மொபைல்கள், விலையுயர்ந்த பைக்குகள் மூலம் ஆசைகளை துாண்டி, போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் மாணவர்கள் மூலம் தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆகையால், மாணவர்கள் போதைப் பழக்கத்தின் அறிகுறிகளைக் கவனிக்கவும், போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தை ஆதரிக்கவும் வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்' என்றார். கருத்தரங்கில் சட்ட கல்லுாரி முதல்வர் சீனிவாசன், உதவி பேரசியர்கள் லலிதா, வரதராஜன், சவுரவ் தேவ் மற்றும் பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !