உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

அரியாங்குப்பம்: எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மணவெளி முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் பழனி, 73. இவர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் மயங்கி விழுந்து சுயநினைவின்றி இருந்தார். அவரை, அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை