பா.ஜ., அமைப்பு தேர்தல் கிளை தலைவர்கள் தேர்வு
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் பா.ஜ., அமைப்பு கிளைத் தலைவர்கள் தேர்தல் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி, மாநில பா.ஜ., அமைப்பு தேர்தலை முன்னிட்டு வில்லியனுார் மாவட்டம், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிளை தலைவர்கள் தேர்தல் காட்டேரிக்குப்பத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் இணை அதிகாரி ஆனந்தன் தலைமை தாங்கினார். தொகுதி தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி, தொகுதி தலைவர் வேதாச்சலம், முன்னிலை வகித்தனர்.காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சந்தை புதுக்குப்பம் கிளை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், ராஜா, ஜெயக்குமார், ராமமூர்த்தி, ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.