உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ., காப்பீடு செய்யப்பட்ட வாரிசுகள் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்

இ.எஸ்.ஐ., காப்பீடு செய்யப்பட்ட வாரிசுகள் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசு தாரர்கள் ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக புதுச்சேரி மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியா முழுதும் உள்ள 19 இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., நர்சிங், பாராமெடிக்கல் ஆகிய படிப்புகளுக்கு 2026– 27ம் ஆண்டுக்கான இ.எஸ்.ஐ., காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசுகள் ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடைய இ.எஸ்.ஐ., பயனீட்டாளர்கள் https://portal.esic.gov.inநாளை (26ம் தேதிக்குள்) தங்கள் விபரங்களை சமர்ப்பித்து, (ஐபி வார்டு சான்றிதழை) வரும் 24ம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம்.  மேலும், தகவல்களுக்கு www.esic.gov.in(www.ro.puducherry.esic.gov.in) என்ற இணைய தளத்திலும், மற்றும் 0413 2357642 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை