உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஊக்குவிப்பு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஊக்குவிப்பு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 : புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகளுக்கு 2025–26ம் ஆண்டிற்கான ஊக்குவிப்பு தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இதுகுறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குநர் கிரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையரின்  வாரிசுகளுக்கு, 2025 –26ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதல். இளநிலை மற்றும் முதுகலை கல்லுாரி படிப்பில், பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு  ஊக்குவிப்புத் தொகை மற்றும்  தேசிய மற்றும் உலகளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம் வெகுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் புதுச்சேரி முப்படை நலத்துறை அலுவலகத்தில் வரும் 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. தங்களின் அடையாள அட்டையுடன்  நேரில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.  அல்லது, https://sainik.py.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரிஜினல் பள்ளி கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத்துறையில் ஜூலை 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். மேலும், காரைக்காலை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில், மாகி மற்றும்  ஏனாம்  பகுதியை சேர்ந்தவர்கள் மண்டல நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை