மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு
18-Apr-2026
அரியாங்குப்பம்: மரத்தில் இருந்து வெடித்து பரவும் இலவம் பஞ்சால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தவளக்குப்பம் – அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் சாலையோரத்தில் உயரமான இலவம் பஞ்சு மரம் உள்ளது. கோடை காலம் துவங்கியுள்ளதால், மரத்தில் உள்ள இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பரவி வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்ப்பதால், வாகனம் ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். அதே போன்று, வழுதாவூர் சாலை வேலைவாய்ப்பு அலுவலம் அருகில் உள்ள இலவம் பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு காற்றில் பறந்து வருகிறது. நுாறடி சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள மரத்தில் இலவம் பஞ்சு பறந்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ள இலவம் பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு பறக்கிறது. எனவே, வனத்துறையினர் மரத்தில் உள்ள பஞ்சுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18-Apr-2026