உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருபுவனையில் கண்தான விழிப்புணர்வு முகாம்

திருபுவனையில் கண்தான விழிப்புணர்வு முகாம்

திருபுவனை: புதுச்சேரி அரசு நலவழித்துறையின் சார்பில் தேசிய கண்பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் கீழ், கண்தான விழிப்புணர்வு முகாம் திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மணக்குள வினாயகர் நர்சிங் கல்லுாரி இணைந்து நடத்திய முகாமிற்கு புதுச்சேரி தேசிய கண்பார்வை இழப்பு தடுப்புத் திட்ட அதிகாரி டாக்டர் கவிதாஅஸ்வின் தலைமை தாங்கி கண் தானம் குறித்து பேசினார்.திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா, மணக்குள வினாயகர் நர்சிங் கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார்.நர்சிங் கல்லுாரி மாணவர்களின் கண்தானம் குறித்த விழிப்புணர்வு கலை விழா மற்றும் மாறுவேடப்போட்டி நடந்தது.போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணன், டாக்டர் கவிதாஅஸ்வின், டாக்டர் ஐஸ்வர்யா ஆகியோர் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் நர்மதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.உதவி பேராசிரியை சக்தி பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி